பெங்களூரில் செட்டில் ஆகப்போறீங்களா? வீட்டு வாடகை கைக்கெட்டாதூரத்தில்! ராக்கெட் வேகத்தில் உயரும் வாடகை..
- May 29
- 1 min read

ஆசிய-பசிபிக் பகுதியில் 2026 முதல் காலாண்டில் ஆபிஸ் வாடகை வளர்ச்சியில் இந்திய நகரங்கள் முன்னிலை வகிக்கிறது. சமீபத்தில் வெளியான Knight Frank அறிக்கையின்படி, பெங்களூரு நகரத்தில் ஆபீஸ் வாடகை வருடாந்திர அடிப்படையில் 14% உயர்வுடன் ஆசியாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவின் டெக் நகரம் என்பதால் உலகளவில் இருக்கும் முன்னணி டெக் நிறுவனங்கள், குறிப்பாக ஜிசிசி அலுவலகங்களுக்கு பெங்களூர் தான் முதல் சாய்ஸ் ஆக உள்ளது. இதனால் அலுவலக இடத்திற்கான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இத்தகைய சூழ்நிலையில் வாடகையும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பெங்களூரில் தற்போது பல அலுவலகங்கள் டிராபிக் மிகுந்த பகுதிகள், சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளில் இருந்து வெளியேறி மாற்று இடத்திற்கு அல்லது நகரத்தை விட்டு வெளிப்புற பகுதிகளில் அலுவலகங்களை அமைக்க துவங்கியுள்ளது. இதனால் அதிகளவிலான குத்தகை ஒப்பந்தம் அதிக வாடகையில் செய்யப்பட்டு வருகிறது. இந்த கலவையான சூழ்நிலைக்கு மத்தியில் பெங்களூரில் வாடகை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாக உயர்ந்துள்ளது.
பெங்களூருவைத் தொடர்ந்து மும்பை 7.5% மற்றும் டெல்லி-NCR 8.2% வாடகை வளர்ச்சியைக் கண்டுள்ளன. இந்த வளர்ச்சி, இந்தியாவின் முக்கிய நகரங்களில் அலுவலக இடங்களுக்கான தொடர்ந்து அதிகரிக்கும் தேவையை பிரதிபலிக்கிறது. குறிப்பாக, உலகளாவிய நிறுவனங்களின் மையங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் விரிவாக்கம் இந்த உயர்வுக்கு ஆதாரமாக உள்ளது. ஆசிய-பசிபிக் பகுதியில் கண்காணிக்கப்பட்ட 24 நகரங்களில் 18 நகரங்களில் வாடகை உயர்வு பதிவாகியுள்ளது. மத்திய கிழக்கு பதற்றம் இருந்தபோதிலும், மொத்தமாக வாடகை 0.8% உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆபீஸ் ரியல் எஸ்டேட் சந்தை
மீண்டு வருவது தொடர்கிறது என்பதும் உறுதியாகிறது.






Comments