மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 400% சம்பள உயர்விற்கு 8வது ஊதியக்குழுவிடம் IRTSA கோரிக்கை!
- May 29
- 1 min read

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 8-வது ஊதியக் குழு (8th Pay Commission) குறித்த மிக முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே தொழிற்சங்கம் (IRTSA) அரசுக்கு அளித்துள்ள ஒரு புதிய பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஊழியர்களின் சம்பளம் வரலாறு காணாத அளவில், சிலருக்கு 400% வரை உயர வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

பொதுவாக, புதிய ஊதியக் குழு அமைக்கப்படும் போது, கீழ்நிலை ஊழியர் முதல் உயர் அதிகாரி வரை அனைவருக்கும் ஒரே அளவிலான (உதாரணமாக 2.6 அல்லது 3 மடங்கு) சம்பள உயர்வு காரணி (Fitment Factor) வழங்கப்படும்.
ஆனால், இந்த முறை இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் (IRTSA) ஒரு புதிய கோரிக்கையை வைத்துள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக சம்பளத்தை உயர்த்தாமல், அவர்களின் பதவி மற்றும் நிலைக்கு ஏற்ப 5 வெவ்வேறு அளவுகளில் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்குக் காரணம், கீழ்நிலை மற்றும் உயர்நிலை ஊழியர்களின் சம்பள இடைவெளியைச் சீரமைப்பதுதான்.
இதை எளிய மொழியில் கூற வேண்டுமானால், இது ஒரு Multiplier ஆகும். உங்கள் தற்போதைய அடிப்படைச் சம்பளத்தை இந்த காரணியால் பெருக்கினால், புதிய ஊதியக் குழுவில் உங்களுக்குக் கிடைக்கப் போகும் புதிய அடிப்படைச் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்துவிடும்.
இதற்கான எளிய சூத்திரம்: தற்போதைய அடிப்படை ஊதியம் × புதிய பொருத்தக் காரணி = புதிய அடிப்படை ஊதியம்.
யாருக்கு எவ்வளவு சம்பளம் உயரும்?
ரயில்வே தொழிற்சங்கம் பரிந்துரைத்துள்ள 5 அடுக்கு சூத்திரத்தின்படி, யாருக்கு எவ்வளவு சம்பளம் உயரும் என்பதைப் பார்க்கலாம்.
1. ஆரம்ப மற்றும் கீழ்நிலை ஊழியர்கள் (நிலை 1 முதல் 5 வரை): இவர்களுக்கு 2.92 மடங்கு சம்பள உயர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு ஊழியரின் தற்போதைய அடிப்படைச் சம்பளம் ரூ.20,000 ஆக இருந்தால், இந்த புதிய சூத்திரத்தின்படி அது ரூ.58,400 ஆக உயரும்.
2. நடுத்தர நிலை ஊழியர்கள் (நிலை 6 முதல் 8 வரை): இவர்களுக்கு 3.50 மடங்கு சம்பள உயர்வு கோரப்பட்டுள்ளது. உதாரணமாக, தற்போதைய அடிப்படைச் சம்பளம் ரூ.45,000 ஆக இருக்கும் ஒரு ஊழியருக்கு, புதிய சம்பளம் ரூ.1,57,500 ஆக அதிகரிக்கும்.











Comments