
nilavanigam.in
REIT ?
`வீடுகளைவிட வணிகச் சொத்துகள் விலை உயர்ந்தவை. ஆகவே, சாதாரண சிறு முதலீட்டாளர்களுக்கு இவை எட்டாக்கனி” என்றிருந்த காலம் மாறிவிட்டது; காரணம், ஆர்.இ.ஐ.டி (REIT, சுருக்கமாக ரெய்ட்) – ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் ட்ரஸ்ட்.
நாம் குடியிருக்க ஒரு வீடு ஒவ்வொருவருக்கும் அவசியம் என்று பார்த்தோம். சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று, குடியிருக்க ஒரு வீடு, வாடகை வருமானத்துக்கு ஒரு வீடு என்றிருந்தால் ஓய்வுக் காலத்தில் நிலையான வருமானம் பெறலாம் என்று நினைத்து, அடுத்தடுத்து வீடுகளை வாங்கி வருகிறார்கள்.
நாம் குடியிருக்கும் வீட்டைப் பேணுவதே வயதான காலத்தில் பெரும் பாரம். இதில் வாடகை வருமானத்துக்காக ஒரு வீட்டை வாங்கினால், அதில் குடியிருக்க அவ்வப்போது ஆள் தேடுவது, வாடகை வசூலிப்பது, சிறு சிறு ரிப்பேர்களைச் செய்து தருவது போன்ற செயல்கள் நம்மை மிகுந்த களைப்படையச் செய்யும். அதைவிட முக்கியமான விஷயம், வாடகை மூலம் கிடைக்கும் வருமானமானது 2 - 3% என்கிற அளவே இருக்கிறது.
ஆனாலும், நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகள் மீது நம்பிக்கையும் பிரியமும் உள்ளவர் எனில், கடைகள், அலுவலகங்கள், கிட்டங்கிகள், இண்டஸ்ட்ரியல் ஷெட்டுகள் போன்ற வணிகச் சொத்துகளில் முதலீடு செய்யலாம். இவை இருக்கும் இடம், தரும் வசதிகள் ஆகியவற்றைப் பொறுத்து 6 - 10% வரை வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வணிகச் சொத்துக்களை வாடகைக்கு எடுப்போர் பொதுவாக, உரிமையாளர்களுடன் நல்லுறவை மேற்கொள்வார்கள்.
அவர்கள் தங்கள் கடை / அலுவலகம் இனிமையாகக் காட்சி தர வேண்டும் என்று விரும்புவதால், நம் சொத்தை நல்லபடியாகப் பராமரிக்கவும் செய்வார்கள். வீட்டின் மதிப்பைவிட வணிகச் சொத்துகளின் மதிப்பை எடை போட்டு வாங்குதல் எளிது. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

வரும் வாடகைதாரர்கள் தரமானவர்களாக இருந்தால், 10 - 12 மாத வாடகை டெபாசிட்டாகக் கிடைக்கும்; மாத வாடகையும் சரியான நேரத்தில் கிடைக்கும். கட்டடத்தின் உள்ளலங்காரப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வாடகைதாரர்கள் அதிக காலம் நீடிப்பார்கள்.
``வீடுகளைவிட வணிகச் சொத்துகள் விலை உயர்ந்தவை. ஆகவே, சாதாரண சிறு முதலீட்டாளர்களுக்கு இவை எட்டாக்கனி” என்றிருந்த காலம் மாறிவிட்டது; காரணம், ஆர்.இ.ஐ.டி (REIT, சுருக்கமாக ரெய்ட்) – ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் ட்ரஸ்ட். இது ஒரு புதிய முதலீட்டு வழி. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறப்பாகச் செயல்படும் இது, ஏறக்குறைய ஒரு மியூச்சுவல் ஃபண்டுதான்.
